தமிழ் முட்டுக்கட்டை யின் அர்த்தம்

முட்டுக்கட்டை

பெயர்ச்சொல்

 • 1

  முட்டாகக் கொடுக்கும் அல்லது வைக்கும் கட்டை அல்லது கம்பு.

  ‘குலைதள்ளிய வாழையை முட்டுக்கட்டை கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்’

 • 2

  வேகமாக நகரும் தேரைத் தடுத்து நிறுத்தச் சக்கரத்தின் முன்பகுதியில் வைக்கும் கைப்பிடியுடன் கூடிய முக்கோண வடிவக் கட்டை.

 • 3

  மேற்கொண்டு செயல்பட முடியாதவாறு தடுப்பது; தடை; தடங்கல்.

  ‘நல்லது செய்ய நினைத்தாலும் முட்டுக்கட்டை போட ஆட்கள் இருக்கிறார்கள்’
  ‘உன் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது?’