தமிழ் முட்டை யின் அர்த்தம்

முட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும்) குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள்கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்/(குறிப்பாக, உண்பதற்குப் பயன்படுத்தும்) கோழி முட்டை.

  ‘பறவைகள் மரங்களில் கூடு கட்டி முட்டை இடுகின்றன’
  ‘முதலை மணலில் முட்டை இடுகிறது’
  ‘கடல் ஆமைகளின் முட்டைகளை எடுத்து விற்பது சட்டப்படி குற்றமாகும்’
  ‘முட்டைப் பொரியல்’
  ‘முட்டைக் குழம்பு’

 • 2

  (பாலூட்டிகளில் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் உருவாகும்) விந்தை ஏற்றுக் கருவாக மாறும் உயிரணு; அண்டம்.

 • 3

  பேச்சு வழக்கு பூஜ்யம்.

  ‘பையன் எல்லாப் பாடங்களிலும் முட்டை!’

 • 4

  பேச்சு வழக்கு (முட்டை வடிவ) சிறு கரண்டி அளவு.

  ‘ஒரு முட்டை எண்ணெய் ஊற்றித் தாளிக்கவும்!’

தமிழ் முட்டை யின் அர்த்தம்

முட்டை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு வறட்டி.