முடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடி1முடி2முடி3முடி4முடி5முடி6

முடி1

வினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து

 • 1

  (இறுதியை எட்டுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (செயல், நிகழ்ச்சி) இறுதி நிலையை அடைதல்; முற்றுப் பெறுதல்; முடிவுக்கு வருதல்

   ‘விழா இனிதே முடிந்தது’
   ‘ஆட்டம் முடிய இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது’
   ‘பேரவைத் தலைவருடைய பொறுப்பு இன்றுடன் முடிகிறது’
   ‘வழிபாடு முடிந்த பின் நவக்கிரகங்களை வலம் வந்து கும்பிட வேண்டும்’
   ‘அறுவைச் சிகிச்சை இப்போதுதான் முடிந்தது’
   ‘இன்றைய ஒலிபரப்பு இத்துடன் முடிகிறது’
   ‘தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்ததும் பழைய முதலாளியைச் சென்று பார்த்தான்’
   ‘பாடல் பதிவு நேற்றுதான் முடிந்தது’
   ‘நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்?’
   ‘ஊழியர்கள் எல்லாரும் அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்’
   ‘தேநீர் இடைவேளைக்கு முன்பே முடிந்திருக்க வேண்டியது இந்த ஆட்டம்’

  2. 1.2 (ஒருவருக்குக் குறிப்பிடப்படும் வயது அல்லது ஒன்றுக்குக் குறிப்பிட்ட கால அளவு) முழுமை பெறுதல்; நிறைவடைதல்

   ‘எனக்கு நாற்பது முடிந்து நாற்பத்தொன்று நடக்கிறது’
   ‘புதுவீட்டுக்குக் குடிவந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது’

  3. 1.3 (குறிப்பிட்டதைக் கொண்டு ஒன்றின்) இறுதிப் பகுதி அமைதல்

   ‘இருபத்திரண்டு என்ற எண்ணில் முடியும் அனைத்துச் சீட்டுகளுக்கும் பரிசு உண்டு’
   ‘‘வடு’ என்று முடியும் குறளைச் சொல் பார்ப்போம்!’

  4. 1.4 ஒரு செயல், நிலை போன்றவை குறிப்பிடப்படும் விளைவை இறுதியில் ஏற்படுத்திவிடுதல்

   ‘வாய்ப் பேச்சு கைகலப்பில் முடிந்தது’
   ‘மோதல் கடைசியில் காதலில் முடிவதுபோல் படத்தின் கதையை அமைத்திருந்தார்கள்’
   ‘சொத்துத் தகராறு கொலையில் போய் முடிந்தது’

  5. 1.5 ஒரு பாதை, இடம் போன்றவை குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டுசேர்த்தல் அல்லது குறிப்பிட்ட இடத்தை இறுதியாகக் கொண்டு அமைதல்

   ‘இந்தச் சாலை எங்கே போய் முடிகிறது?’
   ‘பிரபஞ்சம் எங்கே முடியும் என்று என் மாணவன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை’
   ‘ஆறு கடலில் முடிகிறது’
   ‘அந்த ஊர் மேற்குத் தொடர்ச்சி மலை முடியும் இடத்தில் இருக்கிறது’

 • 2

  (செயலாற்றுதல் குறித்த வழக்கு)

  1. 2.1 ஒன்றைச் செய்யக்கூடிய தன்மையில் அமைதல் அல்லது இருத்தல்; இயலுதல்

   ‘‘என்னால் முடியாது’ என்று சொல்லாதே ‘முடியும்’ என்று சொல்!’
   ‘யாராலும் மறுக்க முடியாத உண்மை!’
   ‘தன்னால் முடிந்ததை அவர் செய்துவிட்டார்’
   ‘நாவலாசிரியர்கள் பெரும்பாலும் கவிஞர்களாக வெற்றிபெற முடிவதில்லையே, ஏன்?’
   ‘‘மாபெரும் ஆங்கில வல்லரசை எதிர்ப்பது முடிகிற காரியமா?’ என்று நம் தலைவர்கள் அப்போது சிந்திக்கவில்லை’
   ‘இருட்டிய பிறகுதான் வீடு வந்து சேர முடிந்தது’
   ‘இரண்டு நாட்களாகத் தாங்க முடியாத வயிற்று வலி’
   ‘பிற மொழிச் சொற்களை ஒரு மொழி தேவையான அளவில் கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது’
   ‘இந்தக் காலத்தில் யாரை நம்ப முடிகிறது?’
   ‘உங்களால் கடனாகப் பத்தாயிரம் ரூபாய் தர முடியுமா?’

  2. 2.2பேச்சு வழக்கு (எதிர்மறை வடிவங்களில்) (உடல்நிலை) நலமாக இருத்தல்

   ‘உடம்புக்கு முடியவில்லை என்று அம்மா படுத்துவிட்டாள்’

  3. 2.3 (பெரும்பாலும் ‘முடிந்த’ என்ற வடிவத்தில் வரும்போது) தீர்மானிக்கப்படுதல்

   ‘தமிழ் நாடகத்தின் தோற்றம் குறித்து முடிந்த முடிவாக எதையும் இப்போது கூற இயலாது’

  4. 2.4இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்று) இல்லாமல் போதல்; தீர்தல்

   ‘கையில் இருந்த காசெல்லாம் முடிந்துவிட்டது. உடனே கொஞ்சம் பணம் அனுப்பு’
   ‘கடையில் இருந்த சரக்கெல்லாம் நேற்றோடு முடிந்துவிட்டது’

முடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடி1முடி2முடி3முடி4முடி5முடி6

முடி2

வினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து

 • 1

  (சேர்த்து) முடிச்சிடுதல்; சுற்றிக் கட்டுதல்.

  ‘கூந்தலைத் தழைய முடிந்திருந்தாள்’
  ‘தலையில் துணியை முடிந்துகொண்டாள்’
  ‘கீரை விற்பவள் காசை முந்தானையில் முடிந்துகொண்டாள்’

 • 2

  (தலையில் பூ முதலியவற்றை) செருகுதல்; அணிதல்.

  ‘தலையில் பூ முடிந்துவிடுகிறேன், வா!’

முடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடி1முடி2முடி3முடி4முடி5முடி6

முடி3

வினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து

 • 1

  (செயல், நிகழ்ச்சி போன்றவை) மேற்கொண்டு தொடராத நிலையை அல்லது நிறைவுபெற்ற இறுதி நிலையை அடையச்செய்தல்; ஒன்று நிகழ்த்தப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட்ட நிலையை அடையச்செய்தல்.

  ‘சமையலை முடித்துவிட்டு வந்து பேசுகிறேன்’
  ‘முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன’
  ‘என் பையன் இப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறான்’
  ‘அவர் பேச்சை முடிப்பதுபோல் தெரியவில்லை’
  ‘நாயகன் புரட்சி வீரனாக மாறுவதாகக் கதாசிரியர் கதையை முடித்திருக்கிறார்’
  ‘எனது வாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்’
  ‘பிரதமர் தனது சுற்றுப் பயணத்தை இன்று முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்’
  ‘பூச்சு வேலைகளை நாளைக்குள் முடித்துவிடுவதாகக் கொத்தனார் சொன்னார்’

 • 2

  (திருமணம், ஒப்பந்தம் போன்றவை) அமைவதற்கு ஏற்பாடு செய்தல்.

  ‘பெண்ணுக்குச் சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க வேண்டும்’
  ‘இந்த வீட்டை எப்படியாவது நான் உங்களுக்கே முடித்துத்தருகிறேன் என்று வீட்டுத் தரகர் உறுதியளித்தார்’

 • 3

  பேச்சு வழக்கு (ஒருவரை) இல்லாதபடி ஆக்குதல்; கொல்லுதல்.

  ‘அவனைக் காட்டிக்கொடுத்தது நான்தான் என்பது தெரிந்தால் என்னை முடித்துவிடுவான்’

முடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடி1முடி2முடி3முடி4முடி5முடி6

முடி4

வினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து

 • 1

  (பூவை) அணிந்துகொள்ளுதல்; சூட்டிக்கொள்ளுதல்.

  ‘பூ முடித்துப் பொட்டு வைத்து அழகுபடுத்திக்கொண்டாள்’

முடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடி1முடி2முடி3முடி4முடி5முடி6

முடி5

பெயர்ச்சொல்

 • 1

  உடலில் (குறிப்பாகத் தலையில்) தொடு உணர்வு இல்லாத, வளர்ந்துகொண்டேயிருக்கும் மெல்லிய இழை; மயிர்.

  ‘என் தங்கைக்கு முழங்காலைத் தொடும் அளவுக்கு முடி இருக்கும்’
  ‘பிடரி முடி காற்றில் பறக்கக் குதிரை ஓடிக்கொண்டிருந்தது’

 • 2

  உயர் வழக்கு (அரசரின்) கிரீடம்.

  ‘மணிமுடி தரித்த மன்னன்’

 • 3

  உயர் வழக்கு அரசாட்சி.

  ‘காதலுக்காக முடி துறந்த மன்னர்களும் உண்டு’

முடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடி1முடி2முடி3முடி4முடி5முடி6

முடி6

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு முடிச்சு.

  ‘கயிற்றில் எத்தனை முடி போட்டிருக்கிறது, பார்!’

 • 2

  பேச்சு வழக்கு நிறையச் சேர்த்துக் கட்டிய கதிரின் தொகுப்பு.

  ‘எனக்கு இன்னும் நாலு முடி நாற்று வேண்டும்’