முடிச்சு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடிச்சு1முடிச்சு2

முடிச்சு1

பெயர்ச்சொல்

 • 1

  எளிதில் அவிழ்ந்துவிடாதபடி அல்லது பிரிந்துவர முடியாதபடி கயிறு, துணி முதலியவற்றில் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக் கட்டப்பட்டிருப்பது/ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.

  ‘இப்படியா முடிச்சுப் போடுவார்கள்; கட்டைப் பிரிக்கவே முடியவில்லையே?’
  ‘தலைமுடி முடிச்சுமுடிச்சாக இருந்தது’
  உரு வழக்கு ‘கதையின் ஆரம்பத்தில் விழுந்த முடிச்சை ஆசிரியர் இறுதியில் திறம்பட அவிழ்த்திருக்கிறார்’

 • 2

  மேற்குறிப்பிட்ட வடிவத்தில் உடலில் காணப்படும் உறுப்பு அல்லது பகுதி.

  ‘தாடைக்குக் கீழ் காணப்படும் முடிச்சுகளில் வீக்கம் இருந்தால் பல்லில் அல்லது தொண்டையில் தொற்று இருக்கலாம்’

முடிச்சு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடிச்சு1முடிச்சு2

முடிச்சு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (கயிறு, சணல் ஆகியவற்றின் நீளத்தைக் குறிக்கும்போது) சுமார் பத்து மீட்டர் கொண்ட அளவு.

  ‘நாலு முடிச்சுக் கயிறு வாங்கிக்கொண்டு வா’