தமிழ் முடிச்சுப் போடு யின் அர்த்தம்

முடிச்சுப் போடு

வினைச்சொல்போட, போட்டு

 • 1

  (உறுதியாகத் தெரியாத, தொடர்பற்ற இரண்டு விஷயங்களை) தொடர்புபடுத்துதல்.

  ‘சண்டை நடக்கும்போது நான் அங்கிருந்தது உண்மை. அதற்காகச் சண்டையையும் என்னையும் முடிச்சுப் போட்டுவிடாதீர்கள்’
  ‘ஆளுங்கட்சித் தொண்டரின் திருமணத்திற்கு எதிர்க்கட்சிப் பிரமுகர் வந்ததை வைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவது நல்லதல்ல’

 • 2

  (ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்) திருமண உறவுக்கான சாத்தியத்தைப் பற்றி அல்லது வேறு விதத்தில் உறவு இருப்பதான வாய்ப்பைப் பற்றிப் பேசுதல்.

  ‘சின்ன வயதிலிருந்து என்னையும் என் அத்தை மகளையும் உறவினர்கள் முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள். கடைசியில் இருவரும் வெவ்வேறு இடத்தில் திருமணம் செய்துகொண்டோம்’
  ‘கூட வேலை பார்க்கும் பெண்ணை உன்னோடு முடிச்சுப் போட்டுப் பேசுகிறார்களே? அது உனக்குத் தெரியுமா?’