தமிழ் முடிவுகட்டு யின் அர்த்தம்

முடிவுகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

 • 1

  (ஒன்றைக் குறித்து) தீர்மானமான முடிவை எடுத்தல்; தீர்மானித்தல்.

  ‘இரண்டு நாள் வேலைக்கு வரவில்லையென்றால் நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன் என்று முடிவுகட்டிவிடுவார்கள்’
  ‘நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பது என்று முடிவுகட்டிக்கொண்டான்’

 • 2

  (ஒன்று அல்லது ஒருவர் தொடர்ந்து தொல்லை, பாதகம் ஏற்படுத்துவதை) மேலும் தொடர முடியாத நிலையை அடையச் செய்தல்.

  ‘‘அவனுடைய கொட்டத்திற்கு முடிவுகட்டுகிறேனா இல்லையா, பார்’ என்று சவால்விட்டான்’
  ‘பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டாவிட்டால் நாடு சிதறிவிடும் அபாயம் இருக்கிறது’