முடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடை1முடை2

முடை1

வினைச்சொல்முடைய, முடைந்து

 • 1

  (பாய், கூடை முதலியவை) பின்னுதல்.

  ‘கூடை முடைவோருக்குக் குறைந்த கூலியே கிடைக்கிறது’
  ‘எங்கள் பள்ளியில் பாய் முடையக் கற்றுக்கொடுக்கிறார்கள்’

முடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முடை1முடை2

முடை2

பெயர்ச்சொல்

 • 1

  (பணம், பொருள் போன்றவற்றுக்கு) தட்டுப்பாடு.

  ‘விதை நெல்லுக்கு இப்போது சற்று முடை’
  ‘பண முடையினால் மோதிரத்தை விற்றுவிட்டேன்’