தமிழ் முட்டிமோது யின் அர்த்தம்

முட்டிமோது

வினைச்சொல்-மோத, -மோதி

 • 1

  (கூட்டமாகவோ பரபரப்பாகவோ மனிதர்கள் ஒரு இடத்துக்கு) திரண்டுசெல்லுதல்; அலைமோதுதல்.

  ‘இன்று புதுப்படம் வெளியாவதால் திரையரங்கில் ரசிகர்களின் கூட்டம் முட்டி மோதுகிறது’

 • 2

  சிரமப்படுதல்; கஷ்டப்படுதல்.

  ‘நானும் முட்டிமோதி வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவன்தான்’
  ‘பல வருடங்களாக முட்டிமோதிய பிறகுதான் எனக்கு மொழிபெயர்ப்பின் நுட்பங்கள் புலப்படத் தொடங்கின’