முட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முட்டு1முட்டு2முட்டு3

முட்டு1

வினைச்சொல்முட்ட, முட்டி

 • 1

  (ஒன்றில் தலையை அல்லது தலையால் ஒன்றை) மோதுதல்; (வாகனங்கள் போன்றவை ஒன்றில்) மோதுதல்.

  ‘கன்று பசுவிடம் முட்டிமுட்டிப் பால் குடித்துக்கொண்டிருந்தது’
  ‘சுவரில் தலையை முட்டிக்கொண்டு கதறி அழுதான்’
  ‘ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் மாடு முட்டிக் காயமடைந்தனர்’
  ‘தடுமாறி ஓடிய பேருந்து புளிய மரம் ஒன்றில் முட்டி நின்றது’

 • 2

முட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முட்டு1முட்டு2முட்டு3

முட்டு2

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று விழாமல்) தாங்கும் அல்லது (நகராமல்) தடுக்கும் கட்டை முதலியவை.

  ‘வண்டியை நிறுத்திச் சக்கரங்களுக்குக் கல்லை முட்டுக் கொடுத்துவிட்டுக் கடைக்குள் சென்றான்’
  ‘விளம்பரப் பலகை சாய்ந்துவிடாமல் இருக்க முட்டு வைத்தான்’

முட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முட்டு1முட்டு2முட்டு3

முட்டு3

பெயர்ச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு மூட்டு.

  ‘கரும்பைக் கால் முட்டில் வைத்து இரண்டாக உடைத்தான்’

 • 2

  வட்டார வழக்கு (சாலை) சந்தி.

  ‘போக வர இடையூறாக முட்டில் நிற்காதே!’