தமிழ் முண்டு யின் அர்த்தம்

முண்டு

வினைச்சொல்முண்ட, முண்டி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு முட்டுதல், நெருக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்.

  ‘மிட்டாய் வாங்குவதற்காகப் பிள்ளைகள் முண்டி மோதின’
  ‘வரிசையில் பின்னால் நின்றவர்கள் முன்னால் நின்றவர்களை முண்டித் தள்ளினர்’
  ‘‘முண்டாமல் படு’ என்று அம்மா சத்தம் போட்டாள்’
  ‘‘வயிற்றுக்குள் குழந்தை முண்டுகிறது’ என்றாள் என் மனைவி’
  உரு வழக்கு ‘அவரை முண்டிப்பார்த்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று பேச்சுக்கொடுத்தான்’

தமிழ் முண்டு யின் அர்த்தம்

முண்டு

பெயர்ச்சொல்

 • 1

  முடிச்சுப் போன்றது.

  ‘அவருடைய புறங்கையில் நரம்புகள் முண்டும் முடிச்சுகளுமாகக் காணப்பட்டன’

தமிழ் முண்டு யின் அர்த்தம்

முண்டு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு வேட்டி.

  ‘கதர் முண்டு, கையில்லாத பனியனுடன் தாத்தா சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்’