தமிழ் முணுமுணு யின் அர்த்தம்

முணுமுணு

வினைச்சொல்முணுமுணுக்க, முணுமுணுத்து

 • 1

  (வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில்) தாழ்ந்த குரலில் தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல்; தாழ்ந்த குரலில் ஒருவரிடம் ரகசியமாகப் பேசுதல்.

  ‘எதற்கு முணுமுணுக்கிறாய்? ‘இஷ்டமில்லையென்றால் கடைக்குப் போக முடியாது’ என்று சொல்லிவிடு!’
  ‘நான் வரும்போது அவன் காதில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாயே?’

 • 2

  வெளிப்படையாக இல்லாமல் தனது மனக்குறையை அல்லது விமர்சனத்தை ஒருவர் வெளிப்படுத்துதல்.

  ‘கட்சியின் மாவட்டச் செயலாளரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றதும் தொண்டர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள்’
  ‘எனது இருபது வருட மண வாழ்க்கையில் என் கணவர் எதற்கும் முணுமுணுத்து நான் கேட்டதில்லை’

 • 3

  வாய்க்குள்ளாக உச்சரித்தல் அல்லது பாடுதல்.

  ‘ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தவாறே தாத்தா கூடத்தில் நடந்துகொண்டிருந்தார்’
  ‘அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதரின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்’