தமிழ் முத்தாய்ப்பு யின் அர்த்தம்

முத்தாய்ப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பேச்சு, படைப்பு அல்லது ஒரு நிகழ்ச்சியின்) சிறப்பான, கச்சிதமான முடிவு.

  ‘மாநாட்டுக்கே முத்தாய்ப்பாக இருந்தது தலைவரின் முடிவுரை’
  ‘பிரதமரின் சுற்றுப் பயணத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது ஜப்பான் பயணம்தான்’
  ‘நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ‘அலைபாயுதே கண்ணா’ என்ற பாடலை வித்வான் பாடினார்’
  ‘படத்தின் இறுதியில், ‘காதல் ஒரு தடவைதான் பூக்கும்’ என்ற வசனத்துடன் இயக்குநர் முத்தாய்ப்பு வைக்கிறார்’