தமிழ் முத்திரை குத்து யின் அர்த்தம்

முத்திரை குத்து

வினைச்சொல்குத்த, குத்தி

  • 1

    (ஒன்றின் மீது அல்லது ஒருவர்மீது குறிப்பிட்ட) அடையாளத்தைச் சுமத்துதல்.

    ‘இந்தப் படத்தைக் காதல் கதை என்று முத்திரை குத்த நான் விரும்பவில்லை’
    ‘நியாயத்தைக் கேட்கப்போனால் சண்டைக்காரன் என்று முத்திரை குத்திவிடுவார்கள்’