தமிழ் முத்து யின் அர்த்தம்

முத்து

வினைச்சொல்முத்த, முத்தி

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு முத்தம் தருதல்; முத்தமிடுதல்.

தமிழ் முத்து யின் அர்த்தம்

முத்து

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (ஆபரணங்களில் பதிக்கும்) சிப்பியிலிருந்து எடுக்கப்படும் உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள்.

  ‘முத்து மாலை விலை அதிகம்’
  ‘முத்துப் போன்ற பற்கள்’

 • 2

  அருமை.

  ‘முத்தான பேச்சு’
  ‘முத்தான காரணங்கள்’

 • 3

  வட்டார வழக்கு (சில வகைப் பழங்களில்) மேல் தோல் நீக்கப்பட்ட கொட்டை.

  ‘புளிய முத்து’
  ‘வேப்ப முத்து’