தமிழ் முத்துமுத்தாக யின் அர்த்தம்

முத்துமுத்தாக

வினையடை

 • 1

  (வியர்வைத் துளிகள், பனித் துளிகள் போன்றவற்றைக் குறிக்கும் போது) (ஒரு பரப்பின் மேல்) திவலைதிவலையாக.

  ‘அவளுக்கு முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்த்திருந்தது’
  ‘இலைகளின் மேல் பனித்துளிகள் முத்துமுத்தாகப் படர்ந்திருந்தன’

 • 2

  (கையெழுத்தைக் குறித்து வரும்போது) தெளிவாகவும் அழகாகவும்.

  ‘எங்கள் சித்தப்பாவுடைய கையெழுத்து முத்துமுத்தாக இருக்கும்’
  ‘என் தம்பி முத்துமுத்தாக எழுதுவான்’