தமிழ் முதன்மை யின் அர்த்தம்

முதன்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இருப்பவற்றுள்) முதலிடம் வகிக்கக்கூடியதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் அமைவது.

  ‘நம் நாட்டில் விவசாயமே முதன்மைத் தொழிலாக உள்ளது’
  ‘எனது களப் பணியில் திரட்டப்பட்ட தரவுகள் யாவும் முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டன’
  ‘இந்த வேர்கள் அனைத்தும் முதன்மை வேர்களிலிருந்து கிளைக்கின்றன’
  ‘என் அன்னையிடமிருந்து கிடைத்த பாராட்டையே நான் முதன்மையாகக் கருதுகிறேன்’
  ‘பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பதுதான் அவர்மீது வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டு’

 • 2

  (பதவியில், நிலையில்) தலைமை.

  ‘முதன்மைப் பொறியாளர்’
  ‘முதன்மை நீதிபதி’