தமிழ் முதல் யின் அர்த்தம்

முதல்

பெயர்ச்சொல்

 • 1

  மூலதனம்.

  ‘சிறு அளவில் முதல் போட்டு ஏதாவது தொழில் துவங்கலாமா என்று யோசித்தார்’

 • 2

  வட்டியுடன் திருப்பித் தர வேண்டிய கடன் தொகை; அசல்.

  ‘இதுவரை வாங்கியது வட்டியும் முதலுமாக அறுபதாயிரத்துக்கு மேல் இருக்கும்’

தமிழ் முதல் யின் அர்த்தம்

முதல்

பெயர்ச்சொல்

 • 1

  (இடத்தில், காலத்தில்) ஆரம்பத்திலோ முந்தியதாகவோ இருப்பது.

  ‘முதலில் நான் சாப்பிடப் போகிறேன்’
  ‘முதல் வரிசை’
  ‘முதல் காட்சி’
  ‘என் முதல் மகனுக்கு நாளை திருமணம்’
  ‘முதல் தரமான படம்’
  ‘நான் முதலில் உங்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்’
  ‘நாம் முதலில் எந்தப் பிரச்சினையை எடுத்துக்கொள்ள வேண்டும்?’
  ‘முதலில் வந்த மாணவன்’

தமிழ் முதல் யின் அர்த்தம்

முதல்

இடைச்சொல்

 • 1

  ‘(குறிப்பிடப்படுவது) தொடங்கி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அவர் ஏழு மணிமுதல் ஒன்பது மணிவரை கடையில் இருப்பார்’
  ‘இது சிறுவர்முதல் பெரியவர்வரை ரசிக்கும் திரைப்படம்’
  ‘உச்சிமுதல் பாதம்வரை நகை மயம்’