தமிழ் முதலீடு யின் அர்த்தம்

முதலீடு

பெயர்ச்சொல்

 • 1

  லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்; மூலதனம்.

  ‘வங்கியில் முதலீடு செய்வது குறித்து நண்பனிடம் யோசனை கேட்டேன்’
  ‘ஐந்து கோடி முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது’
  ‘மிகக் குறைந்த முதலீட்டில்தான் இந்தக் கடையை ஆரம்பித்தேன்’

 • 2

  லாபம் ஈட்டுவதற்காகப் பங்குகளை வாங்கச் செலவிடப்படும் பணம்.

  ‘பங்குச் சந்தையில் நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு அதிகரித்துவருகிறது’