தமிழ் முதிர் யின் அர்த்தம்

முதிர்

வினைச்சொல்முதிர, முதிர்ந்து

  • 1

    (மரம், காய் முதலியவை) அதிகபட்ச வளர்ச்சியை அடைதல்; முற்றுதல்.

    ‘முதிர்ந்த மரங்கள்தான் மரவேலைகளுக்கு ஏற்றவை’
    ‘காய் முதிர்ந்ததும் பறிக்கலாம்’
    ‘இளம் செடியை மண்ணிலிருந்து பிடுங்குவதைவிட முதிர்ந்த செடியைப் பிடுங்குவது கடினம்’