தமிழ் முதுகு யின் அர்த்தம்

முதுகு

பெயர்ச்சொல்

 • 1

  (மனித உடலில்) பின்கழுத்திலிருந்து இடுப்புவரை உள்ள பக்கம்; (விலங்கின் அல்லது பறவையின் உடலில்) கழுத்திலிருந்து வால்வரை உள்ள மேல்பகுதி.

  ‘இந்தத் தைலத்தை என் முதுகில் தடவிவிடு’
  ‘அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்தால் முதுகு வலிக்கும்’
  ‘அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருக்கும்’
  ‘பெண் தூக்கணாங்குருவியின் முதுகுப் பகுதி மஞ்சள் நிறத்துடனும் கரும் பழுப்பு நிறத்துடனும் காணப்படும்’

 • 2

  (நாற்காலி முதலியவற்றில்) சாய்ந்துகொள்வதற்கு உரிய பகுதி.

  ‘முதுகு ஒடிந்த நாற்காலி’

 • 3

  (புத்தகத்தில்) தாள்கள் இணைக்கப்பட்டு அமைந்திருக்கும் தட்டையான நீண்ட பக்கவாட்டுப் பகுதி.

  ‘புத்தகத்தின் முதுகுப் பகுதியில் புத்தகத் தலைப்பை அச்சிட மறந்துவிட்டார்கள்’