தமிழ் முத்திரை யின் அர்த்தம்

முத்திரை

பெயர்ச்சொல்

 • 1

  (அரசு, அமைப்பு முதலியவற்றின்) சின்னம்/(ஒரு அலுவலகத்தை அல்லது அதிகாரியை) அடையாளப்படுத்தும் குறியீடு.

  ‘சோழர் முத்திரை பொறித்த நாணயங்கள்’
  ‘உதவித்தொகைக்கான விண்ணப்பத்தில் கல்லூரி முதல்வரின் கையெழுத்துடன் முத்திரையும் இருக்க வேண்டும்’
  ‘முத்திரையைப் பார்த்தால் கடிதம் என்றைக்கு அஞ்சல் செய்யப்பட்டது என்பது தெரியும்’

 • 2

  (வாக்குச் சீட்டு முதலியவற்றில்) வாக்காளர் பதிக்கும் குறியீடு.

  ‘‘நாற்காலிச் சின்னத்தில் முத்திரையிடுங்கள்’ என்று ஒலிபரப்பிக்கொண்டு பிரச்சார வண்டி சென்றது’

 • 3

  (உறை முதலியவை பிரிக்கப்படாமல் இருப்பதற்கான) அரக்குப் பதிவு.

  ‘முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்’

 • 4

  ஒருவருடைய செயல், படைப்பு போன்றவற்றில் வெளிப்படும் தனித்துவத்தின் அடையாளம்.

  ‘காதல் காட்சியில் இயக்குநரின் முத்திரை தெரிகிறது’
  ‘டிகிரி காப்பி என்பது கும்பகோணத்தின் தனி முத்திரை’
  ‘முதல் தொகுப்பு அளவுக்கு இந்தத் தொகுப்பு இல்லாவிட்டாலும் கவிஞரின் முத்திரை அங்கங்கே வெளிப்படுவதைச் சொல்லியாக வேண்டும்’

 • 5

  நாட்டியம்
  ஒரு கருத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கும் கை அசைவு.

  ‘அபய முத்திரையுடன் இருக்கும் திருமாலின் சிற்பம்’

 • 6

  இலங்கைத் தமிழ் வழக்கு அஞ்சல் தலை.

  ‘பத்து ரூபாய் முத்திரை ஒட்டியது போதவில்லை’