தமிழ் முந்தானையைப் பிடித்துக்கொண்டு யின் அர்த்தம்

முந்தானையைப் பிடித்துக்கொண்டு

வினையடை

  • 1

    (அன்பு மிகுதியால் அல்லது சார்ந்திருக்கும் தன்மையால் ஒரு பெண்ணை) விட்டுப் பிரியாமல்.

    ‘கல்லூரியில் படித்து முடித்து வேலைக்குப் போகப் போகிறான். இன்னும் அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டு திரிகிறானே!’
    ‘பெண்டாட்டி முந்தானையைப் பிடித்துக்கொண்டு அலையும் இவன் எப்படி அவளை இரண்டு மாதம் பிரிந்து இருக்கப்போகிறான்?’