தமிழ் முந்து யின் அர்த்தம்

முந்து

வினைச்சொல்முந்த, முந்தி

 • 1

  தனக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைக் கடந்து செல்லுதல்; கடந்து முன் செல்லுதல்.

  ‘பேருந்தை முந்தும்போது கார் விபத்துக்குள்ளாகியது’
  ‘800 மீட்டர் ஓட்டத்தில் முன்னால் ஓடிக்கொண்டிருந்தவரையும் கடைசி நிமிடத்தில் அவர் முந்திவிட்டார்’

 • 2

  (ஒன்றைப் பெறவோ செய்யவோ பிறரைக் காட்டிலும்) விரைதல்.

  ‘எனக்குதான் அந்த வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் முந்திக்கொண்டார்’
  ‘‘முந்துங்கள்! இன்னும் சில மனைகளே விற்பனைக்கு உள்ளன’ என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது’
  ‘எல்லோரையும் முந்திக்கொண்டு அவள் சரியான பதிலைச் சொன்னாள்’

 • 3

  (சாதனை, சிறப்பு போன்றவற்றில் ஒருவரை) மிஞ்சுதல்.

  ‘உலகத் தரவரிசையில் ரோஜர் ஃபெடரரை முந்துவதற்கு நடாலுக்கு இன்னும் ஒருசில புள்ளிகளே தேவைப்படுகின்றன’
  ‘அதிக விக்கெட்டுகள் எடுத்து ஷேன் வார்னேயின் சாதனையை முரளிதரன் முந்திவிட்டார்’