தமிழ் முன் யின் அர்த்தம்

முன்

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றை அல்லது ஒருவரை ஒட்டி எதிர்ப்புறம் அமைந்திருக்கும் பகுதி; ஒரு பொருள், இடம் முதலியவற்றின் முதல் பகுதியாகவோ தொடக்கப் பகுதியாகவோ இருப்பது.

  ‘பேருந்து திடீரென்று நின்றதால் முன் இருக்கையில் அவனது தலை மோதியது’
  ‘கதவின் முன்பக்கத்தைத் துடை’
  ‘பேருந்தின் முன்பகுதி நசுங்கியிருந்தது’
  ‘மான், புலி ஆகிய இரண்டில் முன்னது தாவர உண்ணி; பின்னது ஊனுண்ணி’

 • 2

  (காலத்தைக் குறித்து வரும்போது) (குறிப்பிட்டதற்கு) முதலில் அமைவது அல்லது நிகழ்வது.

  ‘நாடகத்தின் முன்பகுதி நன்றாக இருந்தது’
  ‘அவர் இயக்கிய இரண்டு படங்களில் முன்னது சுமார்தான் என்றாலும் பின்னது மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது’

தமிழ் முன் யின் அர்த்தம்

முன்

வினையடை

 • 1

  முன்னால்.

  ‘காலை முன் வைத்தவன் திடுக்கிட்டு நின்றான்’

தமிழ் முன் யின் அர்த்தம்

முன்

இடைச்சொல்

 • 1

  ‘முன்னால்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நாய் எனக்கு முன் ஓடியது’
  ‘புத்தகம் உனக்கு முன்தானே கிடக்கிறது’
  ‘கணிப்பொறியின் முன் உட்கார்ந்து வெகுநேரம் வேலை பார்ப்பவர்களுக்கு உடல் ரீதியாக நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன’
  ‘ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி’
  ‘அவளுக்கு முன் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்’