தமிழ் முனகு யின் அர்த்தம்

முனகு

வினைச்சொல்முனக, முனகி

 • 1

  (வலி, காய்ச்சல் போன்றவற்றின் காரணமாக) மெல்லிய குரலில் ஒலி எழுப்புதல்; முணுமுணுத்தல்.

  ‘இரவு முழுவதும் காய்ச்சலால் முனகிக்கொண்டிருந்தான்’

 • 2

  (விருப்பமின்மை, எதிர்ப்பு, சலிப்பு முதலியவற்றை வெளிப்படுத்தும் விதமாக) தெளிவற்ற விதத்தில் மெல்லிய குரலில் பேசுதல்; முணுமுணுத்தல்.

  ‘‘எடுபிடி வேலைக்கு நான்தான் கிடைத்தேனா?’ என்று முனகியவாறே சென்றான்’
  ‘வாய்க்குள்ளேயே முனகாதே; சத்தமாகப் பேசு!’

 • 3

  (பாட்டு, மெட்டு போன்றவற்றை வாய்க்குள்ளே) முணுமுணுத்தல்.

  ‘ஏதோ ஒரு பழைய பாட்டை முனகிக்கொண்டு வந்தான்’