தமிழ் முன்னணி யின் அர்த்தம்

முன்னணி

பெயர்ச்சொல்

 • 1

  (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில்) வெற்றி அடையும் வாய்ப்புடன் இருக்கும் நிலை; முன்னிலை.

  ‘அந்த வேட்பாளர் ஐயாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்’
  ‘முதல் பாதியில் முன்னணியில் இருந்த அணி தோற்றது பலருக்கும் ஆச்சரியம் தந்தது’

 • 2

  பலருள் அல்லது பலவற்றுள் சிறப்பு, திறமை, தகுதி போன்றவற்றின் அடிப்படையில் முதன்மையையோ அல்லது அதிக முக்கியத்துவத்தையோ வகிக்கும் நிலை.

  ‘தொழில் வளர்ச்சியில் நம் நாடு முன்னணியில் உள்ளது’
  ‘அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் இவரும் ஒருவர்’
  ‘முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் படம்’

 • 3

  அரசியலில் பல அமைப்புகள் இணைந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.

  ‘இந்தத் தேர்தலில் ஜனநாயக முன்னணி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது’