தமிழ் முன்னதாக யின் அர்த்தம்

முன்னதாக

வினையடை

 • 1

  (குறிப்பிடப்படும் நேரத்திற்கு அல்லது குறிப்பிடப்படுவதற்கு) முன்பு.

  ‘ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையம் வந்துவிட்டேன்’
  ‘இரு அணிகளுக்கு இடையே இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது’

 • 2

  (செய்தித்தாள், தொலைக்காட்சிச் செய்திகள் போன்றவற்றில் பயன்படுத்தும்போது) முன்னால் சொல்லப்பட்ட வாக்கியத்திற்குத் தொடர்புடையதாகவோ அல்லது அதன் ஆரம்பமாகவோ முதலில் ஒன்று நிகழ்ந்தது என்பதைக் காட்டப் பயன்படுத்தும் சொல்.

  ‘‘செயற்கை எரிபொருள்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும்’ என்றார் பிரதமர். முன்னதாக இந்திய அறிவியல் மாநாட்டைத் துவக்கிவைத்த பிரதமர் இளம் விஞ்ஞானிகளைக் கௌரவித்தார்’