தமிழ் முன்னாள் யின் அர்த்தம்

முன்னாள்

பெயரடை

  • 1

    (பொறுப்பு, பதவி, சில உறவுகள் முதலியவை குறித்து வரும்போது) கடந்த காலத்தில் இருந்த.

    ‘முன்னாள் அமைச்சர் ஒருவர் விழாவுக்குத் தலைமை வகித்தார்’
    ‘இவன் என்னுடைய முன்னாள் மாணவன்’
    ‘கல்லூரி விழாவுக்குத் தலைமைதாங்க முன்னாள் முதல்வரை அழைத்திருந்தார்கள்’