தமிழ் முன்னிலை யின் அர்த்தம்

முன்னிலை

பெயர்ச்சொல்

 • 1

  (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில் பிறரைவிட அல்லது பிறவற்றைவிட) வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் நிலை அல்லது இடம்; முன்னணி.

  ‘எங்கள் கட்சி வேட்பாளர் பத்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்’
  ‘இதுவரையிலான போட்டிகளில் இந்தியாவே முன்னிலை வகிக்கிறது’

 • 2

  ஒரு செயல், நிகழ்ச்சி போன்றவை நடக்கும் இடத்தில் குறிப்பிடப்படுபவர் முன்நின்று நடத்தக்கூடிய அல்லது முன்னால் இருக்கக்கூடிய நிலை.

  ‘இறைவன் முன்னிலையில் பூக் கட்டிப்போட்டுப் பார்த்தார்கள்’
  ‘என் ஆசிரியரின் முன்னிலையில் என் திருமணம் நடந்தது’
  ‘கட்சித் தலைவரின் முன்னிலையில் இந்தப் புத்தகம் வெளியிடப்படும்’

 • 3

  இலக்கணம்
  பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகிய மூன்று இடங்களுள் கேட்பவரைக் குறிப்பது.