தமிழ் முன்னிலைப்படுத்து யின் அர்த்தம்

முன்னிலைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (பலவற்றுக்கு அல்லது பலருக்கு மத்தியில் ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) முக்கியத்துவம் அளித்தல்.

  ‘கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதில் அவர் மிகுந்த முனைப்புடன் இருந்தார்’
  ‘வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் நாங்கள் முன்னிலைப்படுத்தவிருக்கிற விஷயங்கள் இவைதான்’

 • 2

  (பாடல் இயற்ற அல்லது கதை சொல்ல ஒன்றை அல்லது ஒருவரை) முன்னிலையாகக் கொள்ளுதல்.

  ‘மோரை முன்னிலைப்படுத்தி காளமேகப் புலவர் பாடிய புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு’
  ‘ஒரு நாய்க் குட்டியை முன்னிலைப்படுத்தி இந்தக் கதையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்’