தமிழ் முன்னெச்சரிக்கை யின் அர்த்தம்

முன்னெச்சரிக்கை

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (அபாயம், கலவரம், விபத்து, மோசமான விளைவு முதலியவை நேரக்கூடிய சூழ்நிலையில் அவை) நிகழாமலோ அல்லது நிகழ்ந்தால் பாதிப்பு ஏற்படாதவாறோ முன்கூட்டியே செய்யும் ஏற்பாடு.

  ‘பிரதமரின் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் கைதுசெய்யப்பட்டனர்’
  ‘சில வகைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்’
  ‘முன்னெச்சரிக்கையாகத் துப்பாக்கியை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டார்’
  ‘விஷப் பாம்புகளைப் பற்றி ஆராய்வதற்காகக் காடுகளுக்குச் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையாகத் தேவையான மருந்துகளை எடுத்துச்செல்வார்கள்’

 • 2

  ஒன்றைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் விதத்தில் இருப்பது; முன்னறிவிப்பு.

  ‘மார்புவலி மாரடைப்புக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்’
  ‘எதிரியின் ஏவுகணைகள் 1500 கி.மீ. தூரத்தில் வரும்போதே இந்தக் கருவி கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை செய்யும்’