தமிழ் முன்னெடு யின் அர்த்தம்

முன்னெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    ஒன்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, உயர் நிலை அடையச்செய்வதற்காகத் தீவிரமாகச் செயல்படுதல்.

    ‘தலித் உரிமைகளுக்கான போராட்டங்களை நாம் முன்னெடுப்போம்’
    ‘தமிழ் நாவலை ஒரு புதிய பரிமாணத்துக்கு இந்த நாவல்மூலம் நகுலன் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்’
    ‘உலகமயமாதலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை இடதுசாரி அமைப்புகள்தான் முன்னெடுத்துச்செல்கின்றன’