தமிழ் முன்னேற்பாடு யின் அர்த்தம்

முன்னேற்பாடு

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (ஒரு நடவடிக்கை, செயல் போன்றவற்றுக்காக) முன்கூட்டியே செய்யும் ஏற்பாடு; ஆயத்தப் பணி.

    ‘தேர்தல் முன்னேற்பாடுகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளன’
    ‘ஊருக்குச் செல்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள்’
    ‘ஊரிலிருந்து நண்பன் வரப்போகிறான் என்ற தகவல் கிடைத்தவுடன் முன்னேற்பாடாக புதிய புத்தகங்களை வாங்கி வைத்தான்’