தமிழ் முன்னேற்றம் யின் அர்த்தம்

முன்னேற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  இருக்கும் நிலையைவிட மேலான, உயர்ந்த நிலை; வளர்ச்சி; மேம்பாடு.

  ‘நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பல புதிய திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன’
  ‘நவீன அறிவியல் முன்னேற்றங்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்’
  ‘நோய்வாய்ப்பட்ட தலைவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது’
  ‘பையனுடைய படிப்பில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்று அவர் வருத்தப்பட்டார்’