தமிழ் முன்னேறு யின் அர்த்தம்

முன்னேறு

வினைச்சொல்முன்னேற, முன்னேறி

 • 1

  தடையைக் கடந்து முன் செல்லுதல்.

  ‘போரில் கிழக்கு எல்லையில் படைகள் முன்னேறியிருப்பதாகச் செய்தி வந்துள்ளது’
  ‘சுற்றி நின்ற கூட்டத்திற்குள் புகுந்து காவலர்கள் முன்னேற முயன்றனர்’

 • 2

  இருக்கும் நிலையைவிட மேலான, உயர்ந்த, சிறந்த நிலையை அடைதல்; வளர்ச்சியடைதல்; மேம்படுதல்.

  ‘வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவனுக்கு நிறைய இருக்கிறது’
  ‘நாடு தொழில் துறையில் வேகமாக முன்னேற என்ன செய்ய வேண்டும்?’
  ‘தந்தையின் உடல்நிலை முன்னேறிவருவதை நினைத்து ஆறுதலடைந்தான்’

 • 3

  (விளையாட்டுப் போட்டிகளில்) அடுத்த சுற்றில் நுழைதல் அல்லது அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுதல்.

  ‘இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறியது’
  ‘டெல்லி அணியைத் தோற்கடித்துக் கபடிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தமிழக அணி முன்னேறியது’