தமிழ் முன்னோடி யின் அர்த்தம்

முன்னோடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒருவரின் அல்லது ஒன்றின் வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கடந்த காலத்தில் இருந்த ஒன்று அல்லது ஒருவர்.

  ‘நாடகத்தின் முன்னோடி தெருக்கூத்து என்று அவர் குறிப்பிட்டார்’
  ‘வசன சம்பிரதாயக் கதையை எழுதிய முத்துக்குட்டிப் புலவர் தமிழ்ப் புனைவிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆவார்’

 • 2

  முன்மாதிரியாக உள்ள ஒன்று அல்லது ஒருவர்; பின்பற்றக்கூடியது.

  ‘அப்துல் கலாம் அவர்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறார்’

 • 3

  ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தைச் சேர்ந்ததாகவும் அவற்றின் உருவாக்கத்துக்குக் காரணமாகவும் கருதப்படும் உயிரினம்.

  ‘பன்றி மற்றும் வாலற்ற விலங்குகளின் முன்னோடிகள் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின என்று கருதப்படுகிறது’
  ‘பறவைகளுக்கு முன்னோடி ஊர்வன ஆகும்’