தமிழ் முன்னே பின்னே யின் அர்த்தம்

முன்னே பின்னே

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவருடைய எதிர்பார்ப்பின்படி) துல்லியமாக இல்லாமல் சிறிது கூடவோ குறைந்தோ.

  ‘விலை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் சரி, நிலத்தை வாங்கிவிடலாம்’
  ‘சரியாகப் பத்து மணிக்கு வர வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் பரவாயில்லை. அவசியம் கூட்டத்துக்கு வந்துவிடு’

 • 2

  பேச்சு வழக்கு (குறிப்பிடப்படும் சூழலில்) இதற்கு முன்னால்.

  ‘உன்னை முன்னே பின்னே நான் பார்த்திருக்கிறேனா?’
  ‘முன்னே பின்னே தெரியாதவனோடு உனக்கு என்ன பேச்சு?’