தமிழ் முன்பணம் யின் அர்த்தம்

முன்பணம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் முன்கூட்டியே தரப்படும் பணம்.

    ‘ஆசாரி முன்பணம் வாங்கிக்கொண்டு போயிருக்கிறார்’

  • 2

    (சம்பளத்திலிருந்து) முன்கூட்டியே வாங்கிக்கொள்ளும் தொகை.

    ‘தீபாவளி முன்பணம் வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்’
    ‘அவசரத் தேவைக்காக என் சம்பளத்திலிருந்து ஐநூறு ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டேன்’

  • 3

    கடையில் தவணை முறையில் பொருள் வாங்கும்போது முழுத் தொகையில் ஒருபகுதியாக முதலில் கட்டும் பணம்.

    ‘முன்பணம் இரண்டாயிரம் ரூபாய் செலுத்திவிட்டு இந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை நீங்கள் எடுத்துச்செல்லலாம்’