தமிழ் முன்பு யின் அர்த்தம்

முன்பு

வினையடை

 • 1

  முற்காலத்தில்; முன்னாளில்.

  ‘இந்த மருந்துகளுக்கு முன்பு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது’
  ‘முன்பு நடந்த நிகழ்ச்சியை அவர் விவரிக்கிறார்’

தமிழ் முன்பு யின் அர்த்தம்

முன்பு

இடைச்சொல்

 • 1

  ‘முன்னால்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கதவுக்கு முன்பு தயங்கி நின்றான்’
  ‘கோயிலுக்கு முன்பு இருக்கும் மைதானத்தில் கூத்து நடக்கிறது’