தமிழ் முன்மாதிரி யின் அர்த்தம்

முன்மாதிரி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கட்டடம், சிலை, இயந்திரம் முதலியவற்றை எப்படி உருவாக்குவது அல்லது அமைப்பது என்பதற்காகச் சிறு அளவில் முதலில் உருவாக்கப்படுவது.

  ‘தலைவர் சிலைக்கு முன்மாதிரி இந்தப் புகைப்படம்தான்’
  ‘அமைக்கப்படவிருக்கும் அனல் மின்நிலையத்தின் முன்மாதிரியை அமைச்சர் பார்வையிட்டார்’

 • 2

  பின்பற்றும் வகையில் எடுத்துக்காட்டாக அமையும் ஒருவர் அல்லது ஒன்று.

  ‘பொருளாதார வளர்ச்சியில் நம் நாடு பிற தெற்காசிய நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் காலம் வரும்’
  ‘இளம் விஞ்ஞானிகளுக்கு அவர் நல்ல முன்மாதிரி’