தமிழ் முன்வா யின் அர்த்தம்

முன்வா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    ஆதரவு, உதவி, ஒத்துழைப்பு போன்றவற்றை ஆர்வத்துடனோ முனைப்புடனோ துணிவுடனோ அளிப்பதற்குத் தயாராக இருத்தல்.

    ‘தேர்தலைப் பற்றிப் பொதுமக்களில் பலர் தாமே முன்வந்து நிருபரிடம் கருத்துத் தெரிவித்தனர்’
    ‘ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியை நடத்தப் பல சேவை அமைப்புகள் முன்வந்துள்ளன’
    ‘இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடுவதற்குப் பதிப்பகங்கள் முன்வர வேண்டும்’