தமிழ் முன்வை யின் அர்த்தம்

முன்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (பிரேரணை, திட்டம், தீர்மானம் முதலியவற்றை) பரிசீலனைக்காகத் தக்க முறையில் சமர்ப்பித்தல்; (ஒரு கேள்வி, கோரிக்கை போன்றவற்றை ஒருவருடைய) கவனத்திற்குக் கொண்டுவருதல்.

  ‘பாடத்திட்டத்தைக் குறித்த கருத்துகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ளன. இந்தியப் பொருளாதாரம்குறித்து அவர் முன்வைக்கும் கேள்விகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன’

 • 2

  உதாரணத்திற்காகவோ ஆராய்வதற்கு அடிப்படையாகவோ ஒன்றை எடுத்துக்கொள்ளுதல்.

  ‘‘சித்தர் பாடல்களை முன்வைத்து மாயையைப் பற்றிய ஓர் அலசல்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்போகிறேன்’
  ‘ரஷ்யப் புரட்சியை முன்வைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்’