முனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முனை1முனை2

முனை1

வினைச்சொல்முனைய, முனைந்து

 • 1

  (குறிப்பிட்ட ஒரு செயலில்) கவனத்துடன் ஈடுபடுதல்.

  ‘நான் பயணத்துக்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தேன்’
  ‘முதியோருக்குக் கல்வி கற்பிப்பதில் முனைந்திருக்கிறார்’

 • 2

  (ஒன்றுக்காக) முயற்சி மேற்கொள்ளுதல்; முயலுதல்.

  ‘தன் சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட முனைந்தார்’
  ‘ஒன்றைப் பற்றிச் சிந்திக்க முனையும்போதுதான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும்’

முனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முனை1முனை2

முனை2

பெயர்ச்சொல்

 • 1

  (முள், ஊசி முதலியவற்றில்) கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்; நுனி.

  ‘பென்சில் முனை உடைந்துவிட்டதா?’
  ‘கத்தியின் முனை மழுங்கியிருக்கிறது’

 • 2

  ஓரம்; கோடி; விளிம்பு.

  ‘மேஜையின் முனை இடித்துவிட்டது’
  ‘தகரப் பெட்டியின் ஒரு முனை நசுங்கியிருந்தது’

 • 3

  (நீளமோ உயரமோ கொண்ட ஒரு பொருளின் அல்லது இணைக்கப்பட்ட ஒன்றின்) தொடங்கும் இடம் அல்லது முடியும் இடம்.

  ‘நூலின் ஒரு முனையை எடுத்து ஊசியில் கோத்தான்’
  ‘தெரு முனையில் அந்தக் கடை உள்ளது’
  ‘தொலைபேசியின் மறு முனையில் பேசுவது யார் என்று தெரியவில்லை’
  ‘மின்னோட்டத்தின் இரு முனைகளுக்கு இடையே ஒரு காந்தப்புலம் உருவாகிறது’

 • 4

  முக்கியமான பல தெருக்கள் சேரும் சந்திப்பு.

  ‘வாலாஜா முனை’
  ‘பாரி முனை’

 • 5

  பரந்த நிலப்பரப்பு குவிந்து கடலில் முடியும் இடம்.

  ‘குமரி முனை’
  ‘நன்னம்பிக்கை முனை தென்னாப்பிரிக்காவில் இருக்கிறது’

 • 6

  (குறிப்பிடப்படும்) செயல்பாடு நிகழும் ஓர் இடம்.

  ‘போர்முனை’

 • 7

  பெருகிவரும் வழக்கு (தேர்தலில் பல கட்சிகள், குழுக்கள்) ஒன்றையொன்று சந்திக்க வேண்டிய நிலை.

  ‘பொதுத்தேர்தலில் சில தொகுதிகளில் பல முனைப் போட்டி இருக்கும்’
  ‘ரஞ்சிக் கோப்பை ஒரு பல்முனைப் போட்டி ஆகும்’