தமிழ் முனைப்பு யின் அர்த்தம்

முனைப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும்) தீவிரம்; கவனம்; மும்முரம்.

  ‘நம் அணியினர் இன்னும் சற்று முனைப்பாக விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்’
  ‘மாநாட்டு வேலைகளில் முனைப்புடன் செயல்பட்ட தொண்டர்களுக்கு என் நன்றி!’
  ‘எல்லையில் ஊடுருவலைத் தடுக்க முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்’
  ‘உண்மையான விமர்சனத்தில் முனைப்புக் காட்டாமல் மனம்போன போக்கில் எழுதியிருக்கிறார்’