தமிழ் முன்னுரை யின் அர்த்தம்

முன்னுரை

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நூலில் அதன் அறிமுகமாக நூலாசிரியரால் அல்லது பிறரால் எழுதப்படும் கட்டுரை; முகவுரை.

  ‘அவர் தன்னுடைய புத்தகங்களுக்கு முன்னுரை எழுதவும் மாட்டார், பிறரிடமிருந்து முன்னுரை வாங்கிப் போடவும் மாட்டார்’

 • 2

  ஒரு கட்டுரையில் அல்லது நூலில் ஆசிரியர் எடுத்துக் கொண்ட தலைப்புக்கு அறிமுகமாக அமையும் தொடக்கப் பகுதி.

  ‘கட்டுரையின் முன்னுரையில் ஒன்றைச் சொல்லிவிட்டு முடிவுரையில் அதற்கு மாறான கருத்தை ஆசிரியர் சொல்கிறார்’
  ‘புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னுரையில் சுருக்கமாகக் கூறிவிட்டு அவருடைய போதனைகளைப் பற்றிப் பிற அத்தியாயங்களில் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்’