தமிழ் முயற்சி யின் அர்த்தம்

முயற்சி

வினைச்சொல்முயற்சிக்க, முயற்சித்து

 • 1

  முயலுதல்; முயற்சிசெய்தல்.

  ‘எவ்வளவோ முயற்சித்தும் அவனுக்கு வேலை வாங்கிக்கொடுக்க முடியவில்லை’

தமிழ் முயற்சி யின் அர்த்தம்

முயற்சி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றுக்காக மேற்கொள்ளும் தளராத) உழைப்பும் செயல்பாடும்.

  ‘எவ்வளவோ முயற்சி செய்தும் நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை’
  ‘அவருடைய முயற்சியால் இந்த ஊரில் பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்பட்டது’

 • 2

  (குறிப்பிட்ட நோக்கத்தில்) முனைப்புடன் மேற்கொள்ளப்படும் செயல்.

  ‘விமானத்தைக் கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது’
  ‘முதல் முயற்சியே வெற்றி பெற்றதில் நமது விஞ்ஞானிகள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்’