தமிழ் முரட்டுத்தனம் யின் அர்த்தம்

முரட்டுத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (குணம், செயல் போன்றவற்றில்) மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை.

    ‘அவர் எதைச் செய்தாலும் முரட்டுத்தனமாகத்தான் செய்வார்’
    ‘அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பிடித்து இழுத்தான்’