தமிழ் முரடு யின் அர்த்தம்

முரடு

பெயர்ச்சொல்

 • 1

  (‘முரடு’ என்னும் வடிவம் மட்டும்)

  1. 1.1 (மிகவும்) கடுமையாக நடந்துகொள்ளும் நபர்

   ‘அவன் சரியான முரடு, அடிதடியில் இறங்கிவிடுவான்’

 • 2

  (பெரும்பாலும் ‘முரட்டு’ என்று பெயரடையாக வரும்போது)

  1. 2.1 உறுதியும் கடினத் தன்மையும் கொண்டது; மென்மையாக இல்லாதது

   ‘முரட்டுக் கை’
   ‘முரட்டுக் கம்பளி’
   ‘முரட்டுத் துணி’
   ‘அவருக்கு முரட்டுக் குரல் என்றாலும் ராகங்களை அவர் கையாளும் விதமே தனி’

  2. 2.2 (குணம், செயல் போன்றவற்றில்) மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை

   ‘இப்படி முரட்டுப் பயலாக இருக்கிறானே, இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்?’
   ‘அப்பாவுடைய பிடி முரட்டுப் பிடியாக இருக்கும்’
   ‘பண்ணையார் வைத்திருக்கிறாரே முரட்டுக் குதிரை, அதை அடக்குவது கடினம்’

  3. 2.3பேச்சு வழக்கு பெரியதாக இருப்பது

   ‘முரட்டுப் பாம்பு ஒன்று வரப்பில் கிடந்தது’
   ‘மாட்டுக்குப் போடுவதற்காக அந்த முரட்டு ஊசியை எடுத்தார்’
   ‘ஏதோ ஒரு முரட்டு உருவம் இருளில் போய்க்கொண்டிருந்தது’
   ‘முரட்டுச் சாவி ஒன்று ஆணியில் தொங்கிக்கொண்டிருந்தது’

  4. 2.4 அறிவுபூர்வமாக இல்லாததோடு தீவிரமாகவும் கடுமையாகவும் இருப்பது

   ‘முரட்டு தைரியத்தோடு காரியத்தில் இறங்கினான்’
   ‘முரட்டுப் பிடிவாதம்’