தமிழ் முரண் யின் அர்த்தம்

முரண்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒன்றுக்கு) எதிரானதாகவோ மாறுபட்டதாகவோ அமைவது; முரண்பாடு.

    ‘சட்டத்துக்கு முரணாகச் செய்யச் சொல்கிறாயா?’
    ‘அவர் தான் சொல்வதற்கு முரணாக யாரும் பேசக்கூடாது என்று நினைப்பவர்’
    ‘கோட்பாடுகள் நடைமுறை வடிவம் பெறும்போது சில முரண்கள் எழுவது இயற்கையே’