தமிழ் முற்றம் யின் அர்த்தம்

முற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  (வீட்டின் முன்பகுதியில் வாசலை ஒட்டிய) திறந்த வெளிப்பகுதி.

  ‘முற்றத்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்’

 • 2

  வீட்டிற்குள் நான்கு கட்டுகளுக்கு நடுவில் கூரையில்லாமல் இருக்கும் பகுதி.

  ‘உள்ளே நுழைந்தவர் முற்றத்தில் இறங்கிக் கைகால் கழுவிக்கொண்டார்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதி.

  ‘முன் முற்றத்தில் பூங்கன்றுகளையும் பின் முற்றத்தில் வாழை மரங்களையும் நடலாம்’